விளையாட்டு

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம்
மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளது.

50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜித்து ராய் தங்கப்பதக்கத்தையும் அமன்பிரீத்
சிங் வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றுள்ளனர். அதேநேரத்தில் இந்திய வீரர்
ஜித்து ராய் உலக சாதனையும் படைத்துள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று
வருகின்றன. இப்போட்டியில் இந்தியா ஏற்கனவே தங்கம், வெள்ளி, வெண்கலம் என
மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது.