விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய
கருத்துகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டு வருவது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் கருத்துக்கணிப்பு
ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை,
விலங்குகளுடன் ஒப்பிட்ட செயல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த
வாரத்தின் ஸ்போர்ட்ஸ் வில்லன் யார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் நடத்திய
கருத்துக் கணிப்பில், பாண்டா கரடி, பூனைக்குட்டி மற்றும் நாய் ஆகிய
விலங்குகளின் வரிசையில் விராட் கோஹ்லியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

விராட் கோஹ்லி குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய
கருத்துக்களை வெளியிட்டு வருவது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.