விளையாட்டு
Typography

கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி கார் எரிந்து
சம்பவ இடத்தில் பலியானார்கள்.

சென்னை ஆலப்பாக்கம் அஸ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் அஸ்வின்சுந்தர் , தேசிய
கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார். இவரும் அவரது மனைவி
நிவேதிதாவும், சொந்த காரில் எம்.ஆர்.சி நகரில் இருந்து போரூர்
ஆலப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர். பட்டினம்பாக்கம் அருகே சென்ற போது
கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.

அதில் காரில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் இருவரும் சிக்கி
கொண்டனர். காருக்குள்ளேயே இருவரும் எரிந்து பலியாயினர்.தகவல் அறிந்து
வந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் , இருவரது உடலை
இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து
போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இருவரும் லீ மெரிடியன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காரில் வீடு
திரும்பும் போது சம்பவம் நடந்துள்ளது.இவர்கள் சென்றது விலை மதிப்புமிக்க
பி.எம்.டபுள்யூ கார் ஆகும். இந்த காரில் எப்படி தீ பிடித்தது என்பது
குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS