விளையாட்டு
Typography

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால், என்னை துரோகி என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் நிறுவனமே அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும், தன்னால் நாட்டுக்கு செய்யப்பட்ட வேவையில் ஒரு வீதம் கூட கிரிக்கெட் நிறுவன தலைவராக இருக்கும் திலங்க சுமதிபாலவினால் ஆற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தான் அவுஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக 10 நாட்களுக்கு செயற்படவே வாக்குறுதியளித்தாகவும், முழு தொடருக்கும் ஆலோசகராக செயற்பட அந்த அணியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தான் நிராகரித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் எதிரணியாக இலங்கை இருந்ததே எனவும் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித சேகாநாயக்கவை மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை, தான் மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்