விளையாட்டு
Typography

அஸ்வின் சுந்தர் கார் ரேஸர் என்பதால் எவ்வளவு வேகமாக சென்றாலும்
கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்பில்லை என்றும், மனைவியுடன் செல்லும்போது
நிச்சயம் காரை அவர் நிதானமான வேகத்தில்தான் ஓட்டியிருப்பார் என்றும்
உறவினர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

கார் விலையுயர்ந்த காரான பி.எம்.டபிள்யூ Z4 காரில் விபத்து ஏற்பட்டவுடன்
நிச்சயம் வெளியே வர இருவராலும் முடிந்திருக்கும் என்றும் அவர்களால்
வெளியே வரமுடியாததற்கு என்ன காரணம் என்றும் உறவினர்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.இந்த விபத்துக்கு முன் அஸ்வின் சுந்தர் கலந்து கொண்ட
பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து
அவர்களிடம் தகுந்த முறையில் விசாரணை செய்தால் இது கொலையாக இருக்க
வாய்ப்புள்ளதை தெரிந்து கொள்ள முடியும் என்றும் உறவினர்கள் வற்புறுத்தி
வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்