விளையாட்டு

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இந்த ஆண்டு (2016)  பிரேசிலின் தலைநகர் ரியோ டே ஜெனீரோவில் (Rio de Janeiro) 5ம் திகதி வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகவிருக்கின்றன.

31வது ஒலிம்பிக்  பந்தயமாக அமையும் இப் போட்டியில்,   28 வகையான விளையாட்டுகளில் 205 நாடுகளிலிருந்து  வீரர்கள்  போட்டியிட இருக்கின்றனர். கால் பந்தாட்டம், கைப்பந்து, நீச்சல் போட்டி, ஓட்டப்பந்தயம், ஹாக்கி, கூடைப்பந்து, சைக்கிள் பந்தயம் ஆகிய விளையாட்டுக்கள் போட்டியில் முக்கிய இடம் பெறுகின்றன. 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்ட்  21ம் திகதி நிறைவு பெற இருக்கின்றன.

 

ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் 24 பல்வேறு இடங்களில்  நடைபெறும், இவை Barra, Deodoro, Copacabana மற்றும்  Maracana என நான்கு  மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் பிரேசில் நேரம் காலை எட்டு மணியளவில் ஆரம்பித்து இரவு பதினொரு மணிக்கு முடிவடையும். ரியோ டி ஜெனிரோவிற்கும்,மத்திய ஐரோப்பிய நேரத்துக்குமிடையிலான நேர வித்தியாசம் ஐந்து மணி நேரம்  என்பது கவனிக்கத்தக்கது.