விளையாட்டு
Typography

டெல்லி சர்வதேச ஏர்போர்ட்டில், துப்பாக்கி சுடுதல் பிரிவின் முன்னணி
வீரர்களிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் துப்பாக்கிகளை பறித்துக்கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுத் தொடர்பாக, கிரிக்கெட் வீரர்களிடம் இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுவரா
என்று தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகளவில் துப்பாக்கி சுடுதல் பிரிவின் பதக்கங்கள் வென்ற வீரர்களான
குர்பிரீத் சிங், கினான் செனாய் உள்ளிட்ட வீரர்கள், செவ்வாய்க்கிழமை
அதிகாலை 4 மணிக்கு டெல்லி சர்வதேச ஏர்போர்ட்டிற்கு வந்தனர். அவர்கள் 5
மணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனிடையே, அவர்கள்
வைத்திருந்த துப்பாக்கிகளையும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறித்துக்கொண்டனர்.
முறையான ஆவணங்கள் இருந்தபோதிலும் அவர்களிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS