விளையாட்டு
Typography

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஸ்மார்ட்ரான் நிறுவனம் எஸ்.ஆர்.டி
என்ற ஸ்மார்ட்போனைசச்சின் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு
அதிகம் இருந்தாலும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாக மொபைல்களை
களம் இறக்கி வருகிறது. அந்த வரிசையில் உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு
நிறுவனமான ஸ்மார்ட்ரான் என்ற நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில்
இறங்கியுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக தனது புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை
வெளியிட்டுள்ளது. SRT என்றும் இந்த ஸ்மார்ட்போன் அழைக்கப்படுகிறது.
இதுதவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு சச்சின் தெண்டுல்கர் பிராண்ட் அம்பாசிடர்
என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் பல புதிய மாடல்களை விரைவில் வெளியிட
திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் முதன்முதலாக பிளிப்கார்ட்
இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. 32 ஜி.பி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்
ரூ.12,999 மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.13,999 விலையிலும்
கிடைக்கிறது. மேலும், பழைய ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாயை கழித்துக்
கொண்டு மீத தொகையை செலுத்தினால் போதும். கூடவே இந்த ஸ்மார்ட்போனின்
பின்புற கவர் 599 ரூபாய் மதிப்புள்ள சச்சின் தெண்டுல்கரின் கையெழுத்துடன்
இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தவணை முறை சலுகை, ஒரு வருட வாரண்டியும்
தரப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்