விளையாட்டு
Typography

ஒலிம்பிக் போட்­டிக்­கான பாரம்­ப­ரிய ஒலிம்பிக் தீப ஓட்டத்தில்,  எதிர்ப்புக்களும் தடைகளும், கலகங்களும் ஏற்பட்டுள்ளன. 

ரியோ டி ஜெனிரோவிலிருந்து  சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Duque De Caixas நகரினூடாக ஓலிம்பிக் தீபம் எடுத்து வரப்படுகையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரங்களை ஏற்படுத்தியதால், காவல் துறையினர் கண்ணீர் புகை, மிளகு ஸ்ப்ரே மற்றும்  ரப்பர் துப்பாக்கிகுண்டு  என்பவற்றிளால் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர். இத் தாக்குதலுக்குள் சிக்கிய ஒரு 10 வயது சிறுமி ரப்பர் துப்பாக்கிகுண்டினால் காயமடைந்து  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

காவல் துறையினரின் தகவற்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளடங்கியிருந்ததாக அறிய வருகிறது.   பிறேசிலின் கல்வி நிலைமை மிகவும் எழ்மையாக இருக்கும் நிலையில்,  ஒலிம்பிக் விளையாட்டிற்காக மொத்தம் 10,5 பில்லியன் யுரோகள் செலவாகின்றதைக்  குறித்து  அவர்கள் விமர்சிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக சம்பளம் செலுத்தப்படாத காரணத்தினால் சில பல்கலைக்கழகங்களில் சரியாக விரிவுரைகள்  நடைபெறவில்லை. 

ஒரு சில வாரங்களிற்கு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடக்கும் நாட்டின் மேல் ஊடகங்களின்   கவனம் அதிகமாக  இருக்கும்.  ரியோவிலும் ஒலிம்பிக் விளையாட்டுகளிற்கு  அப்பால் அந்த நாட்டின் அரசியல் நிலை குறித்த மக்களின் கவனயீர்ப்பு எதிர்ப்புக்களாக இவ்வகையான ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது குறிப்பிட்டத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்