விளையாட்டு
Typography

நள்ளிரவு 2 மணி வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று ஆட்டநாயகன் விருது
பெற்ற கொல்கத்தா அணியின் நாதன் கவுல்டர்-நைல் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டி மழையின் காரணமாக சுமார் நள்ளிரவு
இரண்டு மணி வரை நீடித்தது. 1.40 மணியளவில் போட்டி முடிந்தாலும் விருதுகள்
வழங்கி வீரர்கள் ஓய்வறைக்கு செல்லுவதற்கு நள்ளிரவு இரண்டு மணியை தாண்டி
விட்டது.
இதுபோன்று நள்ளிரவு இரண்டு மணி வரை யாராலும் கிரிக்கெட் விளையாட முடியாது
என்று ஆட்ட நாயகன் விருது பெற்ற கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்
நாதன் கவுல்டர்-நைல் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாதன் கவுல்டர்-நைல் கூறுகையில் ‘‘நள்ளிரவு 12.40 மணிக்கு
போட்டி அதிகாரிகள் வந்து மைதானத்தை பார்வையிடும் வரை எந்தவொரு வீரரும்
பதற்றம் அடையவில்லை. இதுபோன்ற விளையாட ஏற்பட்ட சமயத்தில் நான் விளையாட
செல்ல விரும்பவில்லை. நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்று நான்
நினைக்கிறேன்.

விளையாட்டின் விதிமுறையை நாம் பார்க்க வேண்டும். ஆனால் நள்ளிரவு 2 மணி
என்ற அர்த்த்தில் நான் என்ன சொல்கிறேன் என்றால், நள்ளிரவு 2 மணியில்
கிரிக்கெட் விளையாட முடியாது. இருந்தாலும் எந்தவிதத்திலும் பதற்றம்
அடையவிலலை. அதிகப்படியான நேரமாக இருந்தாலும், நாங்கள் அங்கே சென்று
விளையாட வேண்டியதிருந்தது’’ என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS