விளையாட்டு

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலியில் இடம்பெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 229 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இதன்மூலம், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரொன்றை இலங்கை முதற்தடவையாக வெற்றி கொண்டுள்ளது. 

மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், ஏற்கனவே தம்புள்ளையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணி, காலியில் இன்று நிறைவு பெற்ற போட்டியிலுவும் வெற்றி பெற்று 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆடிய அவுஸ்திரேலியா, இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமால் 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இலங்கை சகல விக்கட்டுக்களையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றது. இதன்மூலம், அவுஸ்திரேலிய அணிக்கு 412 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், போட்டியின் மூன்றாவது நாளாக இன்று அவுஸ்திரேலியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வி கண்டது. 

இலங்கை அணியின் சுழற்பந்து விச்சாளரான டில்ருவான் பெரேரா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 10 விக்கட்டுக்களை வீழ்த்தினார். ரங்கன ஹேரத் 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 

இலங்கை, அவுஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரையும் விட்டு வைக்காமல் பதம் பார்த்து வருகிறது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

சென்னையில் உள்ள அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து இந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது