விளையாட்டு
Typography

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டதை அடுத்து ஊடகங்கள் அனைத்தும் இந்திய அணியின் தவறுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன.

எனினும் நேற்று இந்த இறுதிப் போட்டி நடைபெற்ற அதே ஓவல் மைதானத்திற்கு அருகிலேயே இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியும் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7-1 என்ற ரீதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

அதோடு இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கறுப்பு பட்டை அணிந்து இப்போட்டியில் விளையாடியிருந்தனர். ஜம்முவில் அண்மையில் நடந்த தாக்குதலில்,  6 போலிஸாரும், ஒரு இராணுவ வீரரும் உயிரிழந்திருந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர்.

சர்வதேச ஹாக்கி தொடர் போட்டிகளில் இவ்வெற்றி மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதவுள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்