விளையாட்டு
Typography

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அணில் கும்ப்ளே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகளுடனான ஒரு நாள் தொடரில் கலந்து கொள்வதற்காக அங்கு இந்திய கிரிக்கெட் அணி அங்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அனில் கும்ப்ளே இம்முடிவை உத்தியோகபூர்வகாக அறிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளேவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், அவரை தொடர்ந்து பயிற்றுனர் பதவியில் நீடிக்குமாறு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் அவர் அதற்கு தயங்கிய நிலையில், பயிற்றுனர் பதவிக்கு எவரும் விண்ணப்பிக்கலாம் எனும் கோரிக்கையுடன், சச்சின், கங்குலி மற்றும் வி.வி.லக்‌ஷ்மன் அடங்கிய மூவர் பரிசீலனை குழுவை அமைத்திருந்தது பிசிசிஐ. அதோடு கும்ப்ளேயையும் இப்பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க கோரியது.

எனினும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலியுடன், கும்ப்ளேவுக்கு சமீபகாலமாக முறுகல் நிலை தொடர்ந்து வந்தது.

இந்நிலையிலேயே தனது ஒரு வருட பயிற்றுனர் பதவிக்காலத்தை முடித்து கொள்கிறார் கும்ப்ளே. இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி பல வெற்றிகளை குவித்ததுடன், டெஸ்ட் போட்டிகளில் முதல் நிலையை பிடித்திருந்தது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS