விளையாட்டு

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தினை சர்வதேசக் கிரிக்கட் சபை இன்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது. 

இதன்மூலம், ஏற்கனவே டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற பத்து அணிகளோடு, இந்த இரண்டு நாடுகளும் இணைந்து கொள்கின்றன. இதன்மூலம், அதிகளவான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் அதிகரிக்கின்றன.