விளையாட்டு
Typography

இலங்கைக் கிரிக்கட் அணியின் 3 வகையான போட்டிகளுக்குமான தலைமைப் பொறுப்பிலிருந்து அஞ்சலோ மத்தியூஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். 

சிம்பாப்வே அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

மத்தியூஸ், 34 டெஸ்ட் போட்டிகளிலும் 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS