விளையாட்டு
Typography

இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சில விடயங்களை வெளிப்படையாக பேச முடியாது என்ற போதிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அணிகளும் பின்னடைவை சந்திப்பதாகவும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பலமாக இருந்த அணி தற்போது முகங்கொடுக்கின்ற கசப்பான நிலைமையில், அதனை மறக்க வேண்டாம் என்றும் உபுல் தரங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “சற்று பொறுமையாக இருங்கள், எங்கள் மீது நம்பிக்கை வைப்பதை முக்கிய விடயம். மீண்டும் எழுவதற்கு எமக்கு பலமாக இருங்கள்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையுடனேயே உபுல் தரங்கவின் அறிக்கையும் நேற்று செவ்வாய்க்கிழமை இணைக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்