விளையாட்டு
Typography

 

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் முறை குத்துச் சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து தான் விளையாடிய 50 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் கூட தோல்வியில்லை எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.

40 வயதாகும் பிளாய்ட் மேவெதர், கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வில் இருந்து திரும்பி வந்து நேற்று தனது வாழ்நாளின் இறுதிப் போட்டியில் அயர்லாந்து குத்துச் சண்டை வீரர் மெக் கிரிகோருடன் மோதினார்.

இப்போட்டியில் முதல் மூன்று சுற்றில் மெக் கிரிகோர் ஆதிக்கம் செலுத்தினார். எனினும் 4வது சுற்றிலிருந்து களைப்படையாது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய மேவேதர் 10வது சுற்றில் மெக்கிரிகோரை வீழ்த்தினார்.

இதையடுத்து பிரபல குத்துச் சண்டை வீரரான ராக்கி மார்சியோனாவை விட ஒரு வெற்றி அதிகம் பெற்று 50-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மேவேதருக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இப்போட்டிக்காக பல நூறு கோடி ரூபாய்க்கு மேல்  பெட்டிங் பேசப்பட்டதும், இப்போட்டி 220 நாடுகளில் தொலைக்காட்சி சேவைகள் ஊடாக ஒளிபரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்