விளையாட்டு
Typography

யூரோ 2016 கால்பந்து போட்டியில் இங்கிலாந்து வெளியேறக் காரணமாக இருந்த மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்தினை இலகுவில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இந்த ஐஸ்லாந்து அணி தகுதிச் சுற்றுப் போட்டியில் கொசோவா அணியினை 2-0 என்ற கணக்கில் விழுத்தி 2018 ஆம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதன்மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்ற முதல் ஆகச்சிறிய நாடு பெருமையைத் தட்டியுள்ளது ஐஸ்லாந்து. ஐஸ்லாந்தின் மக்கள் தொகை வெறும் 3 இலட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த சிறிய நாடாக டிரினிடாட்  டொபாகோ திகழ்ந்தது. சுமார் 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட டிரினிடாட் 2006 ஆம் ஆண்டு தகுதி பெற்றிருந்தது. தற்போது இந்த சாதனையை ஐஸ்லாந்து உடைத்துள்ளது.

தகுதிச் சுற்றில் 10 ஆட்டங்களில் 22 புள்ளிகள் பெற்று தகுதி பெற்ற ஐஸ்லாந்து அணியின் பயிற்சியாளரான ஹெய்மிர் ஹால்கிரிம்சன் என்பவர் ஒரு பல் மருத்துவர் ஆவார். ஐஸ்லாந்து சார்பாக கொசாவோ உடனான இறுதிப் போட்டியில் ஜில்ஃபி சிகர்ட்சன் மற்றும் ஜொஹான் குட்மண்ட்சன் ஆகியோர் இரு கோல்களை அடித்து அதனை 2018 உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்குத் தகுதி பெறச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு அத்திலாந்திக் பெருங்கடலில் கிரீன்லாந்து தீவுக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடான ஐஸ்லாந்து நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இரண்டாவது சிறிய நாடும் ஆகும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்