விளையாட்டு
Typography

சனிக்கிழமை இரவு பிரேசிலில் ஆண்களுக்கான ஒலிம்பிக் சைக்கிளிங் போட்டி நடைபெறும் இடத்தில் முடிவடையும் பகுதியில் மர்ம வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் போது பார்வையாளர்கள் தூரத்தில் இருந்ததாலும் போட்டியில் பங்கேற்ற வீரர்களும் தூரத்தில் வந்து கொண்டிருந்ததாலும் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. 

போட்டியும் நிறுத்தப் படவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த வெடிகுண்டு அகற்றும் படையினர் குறித்த இடத்தை அடைந்து வெடிகுண்டை அகற்றியதுடன் ஸ்கேனிங் செய்து பாதுகாப்பை உறுதி செய்ததை அடுத்து  போட்டி இடைநிறுத்தப் படாது நடைபெற்றது. எனினும் குண்டை அகற்றும் போது ஏற்பட்ட சத்தம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பிலும் கேட்டது குறிப்பிடத்தக்கது.  இதேவேளை ஞாயிறு அதிகாலை பத்திரிகையாளர் மாநாட்டு அறையினுள் துப்பாக்கி வேட்டு ஒன்று பாய்ந்ததாகவும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

ரியோ ஒலிம்பிக்கிற்காக பிரேசில் அரசு தனது தீவிரவாதத் தடுப்புப் பிரிவினருடன் 85 000 வலிமையான இராணுவத்தையும் 14 000 பாதுகாப்பு அதிகாரிகளையும் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்