விளையாட்டு
Typography

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் இன்று தர்மசாலாவில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது.

அனுஷ்கா - கோலி திருமணம் என்பதால் கோலி விடுமுறையில் சென்று விட்டதாக செய்திகள் எழுந்த நிலையில், ரோகித் ஷர்மாவின் தலைமையில், களமிறங்கியது இந்திய அணி.

தோனியைத் தவிர வேறு எவரும் 10 ரன்களை தாண்டவில்லை. தோனி 87 பந்துகளில் 65 ஓட்டங்களை குவித்தார். இறுதியில் 38 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே இந்தியா எடுத்தது.

பந்துவீச்சில் சுரங்க லக்மல் 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி சார்பில் தரங்க 49 ஓட்டங்களையும், மத்திவ்ஸ், 25 ஓட்டங்களையும் டிக்வெல 26 ஓட்டங்களையும் எடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதையடுத்து 1-0 எனும் நிலையில் இலங்கை அணி ஒரு நாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இரு போட்டிகள் சமநிலையில் முடிந்த போதும் இந்தியா 1-0 என  தொடரைக்கைப்பற்றியது  குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையில் அடுத்த போட்டி மொஹாலியில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS