விளையாட்டு
Typography

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்று மீண்டும் தனது ஃபோர்மை நிரூபித்துள்ளது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா, மூன்று இரட்டைச் சதங்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்தார்.

இன்றைய போட்டியில் அவர் 153 பந்துகளில் 208 ஓட்டங்களை குவித்து தனது மூன்றாவது இரட்டைச் சதத்தை பெற்றார். முன்னதாக 2013 இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ஓட்டங்களையும், 2014 இல் இந்தியாவுக்கு எதிராக 264 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். இன்றைய போட்டியில் அவரது இரண்டாவது சதம் 36 பந்துகளில் பெறப்பட்டது.

இன்றைய சாதனையை அடுத்து ரோஹித் ஷர்மா இதுவரை 16 சதங்களையும், மூன்று இரட்டைச் சதங்களையும் பெற்றுள்ளார். இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 392 ஓட்டங்களை எடுத்தது. ஷேகர் தவான், சுரேஷ் ஐயர் ஆகியோரும் அரைச் சதங்களை கடந்திருந்தனர்.

பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 251 ஓட்டங்களை எடுத்தது. இறுதிவரை சளைக்காது ஆடி ஆஞ்சலோ மெத்திவ்ஸ் 111 ஓட்டங்களை எடுத்தார். இது அவரது இரண்டாவது சதமாகும். இப்போட்டியில் வென்றதை அடுத்து மூன்று நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 17ம் திகதி விசாகப் பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்