விளையாட்டு
Typography

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் ஆடவருக்கான 10 மீற்றர் துப்பாக்கிச் சுடுதலின் இறுதிச் சுற்றில், இந்திய இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிச் சுடு வீரர் அபினாவ் பிந்திரா பதக்கமெதனையும் கைப்பாற்றாது ஏமாற்றத்துடன் வெளியேறினார்.  

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தவர் அபினாவ் பிந்திரா. தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதலில் காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் என அனைத்திலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த அபினாவ் பிந்திரா இம்முறை ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது பதக்கத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. 

இந்தியாவின் மிக நீண்டகால ஒரே ஒரு தங்கப் பதக்கம் வென்ற வீரர் பிந்திரா. இம்முறை தனது ஐந்தாவது ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய அவர், இன்றைய இறுதுச் சுற்றுப் போட்டியில் ஒரு கட்டத்தில் புள்ளிகளின் படி இரண்டாம் நிலையில் இருந்த போதும், இறுதிக் கட்டத்தில் பின் தள்ளப்பட்டார். இப்போட்டியில் அவர் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்றிருந்தாலும், இந்தியாவின் மல்யுத்த வீரர் சுஷில் குமாரைப் போன்று இரட்டை ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற வீரர்கள் வரிசையில் இணைந்திருப்பார். 

இதேவேளை இந்திய பெண்கள் ஹாக்கி அணி முதல் போட்டியில் ஜப்பானுடன் 2-2 என சமநிலைப் படுத்தி அடுத்த போட்டிக்குச் செல்கிறது. 36 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டி ஒன்றில் இந்திய மகளீர் ஹாக்கி அணி விளையாடுவது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை நேற்றைய போட்டிகளில் அமெரிக்க நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் பெற்றுக் கொண்ட தங்கப் பதக்கத்தை அடுத்து 19 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற வீரராக புதிய சாதனை படைத்துள்ளார். 

அதோடு கொசோவா நாடு தனது முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது. பெண்களுக்கான ஜூடோ போட்டியில் இத்தாலி வீராங்கணையை வென்று கொசோவின் மஜ்லிந்தா கெல்மெண்டி தன் நாட்டுக்காக இப்பதக்கத்தை  பெற்றுள்ளார். 

இதேவேளை ஒலிம்பிக் காற்பந்து போட்டிகளில் பிரேசில் அணி, தென் ஆபிரிக்க அணியுடனான முதலாவது போட்டியை 0-0 என சமநிலைப் படுத்தியது. பிரேசிலின் நெய்மாருக்கு கிடைத்த கோல் வாய்ப்பை அவர் நழுவவிட்டார். கடந்த உலக கோப்பை காற்பந்து போட்டியில் ஜேர்மனியிடம் 7-1 என பிரேசில் தோற்றது எவராலும் மறக்கமுடியாது. அடுத்த போட்டியில் டென்மார்க்குடன் வெற்றிபெறாவிடின், ஒலிம்பிக்கிலிருந்தும் பிரேசில் பரிதாபமாக வெளியேறவேண்டி வரும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்