உலகம்
Typography

மத்திய அமெரிக்காவில் இம்முறை குளிர் காலம் ஆரம்பித்துள்ளதுடன் அங்கு கடும் பனிப்புயல் வீசி வருவதால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் முக்கியமான நெடுஞ்சாலைகள் மூடப் பட வேண்டிய சூழலும் உண்டாகியுள்ளது. அமெரிக்கா முழுதும் சுமார் 15 000 விமானங்களது போக்குவரத்து தாமதமாகியுள்ளதுடன் 1600 இற்கும் அதிகமான விமானங்களின் பயணம் ரத்தும் செய்யப் பட்டது. அதிகபட்சமாக சிக்காக்கோ விமான நிலையத்தில் இருந்து 770 விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டன.

சுமார் 2 கோடி மக்கள் வசிக்கும் கன்சாஸ், மிசௌரி, நெப்ரஸ்கா மற்றும் அயோவா போன்ற மாநிலங்களில் கடும் பனிப்புயல் வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதுடன் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் ஈராக் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை 6.3 ரிக்டர் அளவில் தாக்கிய வலிமையான நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானதாகவும் சுமார் 750 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஈரானின் கெர்மன்ஷா மாநிலத்திலும் ஈராக்கின் குர்திஷ்தான் பகுதியிலும் வலிமையாக உணரப் பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்