வான்வெளிக்கு இரயில் பொம்மையை அனுப்பி வைத்த தந்தை : வீடியோ
- Saturday, 22 September 2012 14:51
தனது 4வயது மகனின் விளையாட்டு ரயில் பொம்மையை பலூன் மூலம் வான்வெளிக்கு அனுப்பினார் Fugelseth என்பவர்.
Oxygen Productions இன் இயக்குனரான இவர் இப்படி ஆக்கபூர்வமாக சிந்தித்துள்ளார்.
HD கமெரா, பழைய கைப்பேசி மற்றும் வெப்ப பலூன் ஆகியவற்றுடன் தன் மகனின் மிக விருப்பமான ரயில் பொம்மையும் ஒர் சிறப்பு பெட்டியில் பொருத்தி அதனை வான்வெளிக்கு அனுப்பியிருக்கிறார். 18 மைல் தூரம் வரை மேலே சென்ற இந்த பொம்மை, பலூன் வெடித்து கீழே விழும் வரையிலான காட்சிகளை மிகத் தெளிவாக பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் படம்பிடித்திருக்கிறது. மேலே பறக்க விட்டப்பட்ட இடத்திலிருந்து 27 மைல் தொலைவில் விழுந்த பொம்மை மீண்டும் அதன் குட்டி உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாம்.
தந்தை மகன் இருவரும் இணைந்து ஆர்ச்சயமான இந்த பரிசோதனையை தொடங்கியதிலிருந்து, வான்வெளியில் பறந்த ரயில் பொம்மை பிடித்த காட்சிகளுடன் அழகான வீடியோவாக உருவாக்கியுள்ளனர். இதில் ரயில் பொம்மையின் முகம் அசையும் வகையிலான அனிமேஷனையும் கூடவே சேர்த்து அசத்தியுள்ளனர்.
வீடியோ:
இவற்றையும் தவறாமல் காணுங்கள்:
- துவாலுவில் கேத் மற்றும் வில்லியம்ஸ் ஆடிய நடனம் : வீடியோ
- புகைப்படங்களில் ஒரு காதல் கதை
- விண்வெளியிலிருந்து நேரடியாக தன் அனுபவங்களை பகிர்கிறார் சுனிதா வில்லியம்ஸ் : வீடியோ
- பேஸ்புக்கில் இப்புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?
- வில்லியம் : கேட் மிடில்டன் தம்பதியினரின் கோலாலம்பூர் விஜயம் : ஆர்ப்பரிப்புடன் மக்கள் (புகைப்படங்கள்)

.jpg)