Tuesday, May 21st

Last update02:00:32 PM

ஒரு மில்லியன் வோல்ட் மின்சாரத்துடன் டேவிட் பிளேய்னின் புதிய சாகசம் (வீடியோ)

உலக புகழ்பெற்ற அமெரிக்க மேஜிக் கலைஞர் டேவிட் பிலேய்னின் அண்மையில் மேற்கொண்ட புதிய மின்சார சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

9 கிலோ எடைகொண்ட மின்சாரம் பாயும் ஆடை அணிந்து , உயர் மின் அழுத்தம் உடைய டெல்சா மின் சுற்றுக்கள் இடையே தொடர்ந்து மூன்று நாட்கள் நின்று இப்புதிய சாகசத்தை படைத்துள்ளார். இம்மூன்று நாட்களும் அவர் உணவின்றி, தூக்கமின்றி அதே இடத்தில் நின்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இப்படி நிற்கையில் அவரை சுற்றி ஒரு மில்லியன் வோல்ட் மின் சக்தி உடைய மின்னல் ஒளிக்கீற்றுக்கள் இயங்கிய வண்ணம் இருந்தன. 'Elcectrified' என பெயரிடப்பட்டுள்ள இச்சாகசம் பார்வையாளர்கள் இடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க்கில் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus