திரைச்செய்திகள்
Typography

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக தன் படத்தை தானே தியேட்டரிலிருந்து வாபஸ் வாங்கியிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிசல்ட் அப்படி. நிற்காமல் போன பஸ்சை பற்றி கவலைப்படுவானேன்... என்கிற பாசிட்டிவ் பாலிஸி எப்பவும் சுசீந்திரனுக்கு உண்டு. அதனால் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத சுசீ, அதற்குள் தன் அடுத்த தயாரிப்பான ‘ஏஞ்சல்’ படத்தை பாதிக்கு மேல் முடித்துவிட்டார்.

அந்த நஷ்டத்தை இந்த லாபம் வந்து சரி பண்ணும் என்பது அவரது நம்பிக்கை. இந்த நேரத்தில் சுசீந்திரனுக்கு அட்வைஸ் கொடுத்த அன்பு உள்ளங்கள் சில, ‘உங்க படத்தில் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி மாதிரியான ரிப்பீட் மூஞ்சுகள் அலுப்பை தருவதால் ஸ்கிரீனை மாற்றுங்க’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

நட்பா? நடப்பா? என்கிற இக்கட்டான சூழலில் இருக்கிறார் சுசீ!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்