இந்தியா
Typography

இந்தியாவில் நக்சலைட்டுக்களின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப்பின் 79வது எழுச்சி தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இதனையடுத்து அவர் பேசியதாவது; “மாவோயிஸ்ட்டுகள் இப்போது நேரடிப் போராட்டம் நடத்த முடியாததால் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிஆர்பிஎஃப் வீரர்களின் விசுவாசத்தை சிதைக்க உலகில் எந்த குண்டும் இல்லை.

இழப்பீடு தொகை எவ்வளவு வழங்கினாலும் இழந்த உயிருக்கு அது ஈடாகாது. ஆனாலும் வீரமரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

நாங்கள் 2016ஆம் ஆண்டில் இருந்தே இதனை ஆரம்பித்தோம். இன்று இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் ஆகியோருக்கு எதிரான போரின் போதும் அல்லது தேர்தல் நடைபெறும் போதும் சிஆர்பிஎப் வீரர்களை தேசம் நினைவுகூர்கிறது. நீங்கள் (சிஆர்பிஎஃப்) அரசியலமைப்பின் பாதுகாவலர்களாக இருக்கின்றீர்கள். மேலும் நிறைவான பணியை செய்து வருகிறீர்கள்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்