இந்தியா
Typography

மத்திய அரசுடன் சுமூக உறவையும், இணக்கத்தையும் கடைபிடிப்பதால்தான், தமிழக அரசு கேட்கும் எதையும் செய்து தர பிரதமர் நரேந்திர மோடி தயாராக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்தை துவக்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்காகவே மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கம் காட்டி வருவதாக கூறினார். அப்படி இருந்தால் தான் தமிழகத்திற்கு அதிகளவிலான திட்டங்கள் கிடைப்பதாக கூறினார். உதான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த விமான சேவை திட்டம் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றார். இதன் மூலம் ஏழை எளிய மக்களும் விமான சேவையைப் பயன்படுத்த முடியும்.

இந்த விமான சேவையால் சேலத்தை சுற்றியுள்ள நகரங்கள் வளர்ச்சி அடையும். சேலம்- சென்னை விமான சேவையால் நாமக்கல் ராசிபுரம், ஈரோடு பகுதிகளில் தொழில் வளர்ச்சியடையும். அதிகளவிலான தொழிற் முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளதால் விமான சேவை முக்கியத்துவம் பெறும் என்றார். எதிர்காலத்தில் சேலம் விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய ரக விமானங்களும் இயக்கப்படும். பசுமை விரைவு வழித்தடம் அமைந்து விட்டால் 3 மணிநேரத்தில் சென்னையில் இருந்து சேலம் வந்துவிடலாம் என்று பேசினார் முதல்வர் பழனிசாமி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்