இந்தியா

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 29ஆம் தேதி இறுதி நாள். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதே?

பதில்:- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சி காரணமாக நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை சட்டப்போராட்டம் மூலமாக மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. 6 வார காலத்துக்குள் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. மத்திய அரசு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க இருக்கிறார்களா?

பதில்:- அந்த நிலைப்பாடு எல்லாம் கடந்து விட்டது. ஏற்கனவே கடிதம் எழுதினோம். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. நாடாளுமன்றம் முடக்கப்படும் அளவுக்கு மத்திய அரசுக்கு நமது எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறதே?

பதில்:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கிறது. இப்போது அதை விரிவுபடுத்த முற்பட்டிருக்கிறார்கள். அதனால் அங்கிருக்கிற மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அதை அரசு உரிய முறையில் பரிசீலிக்கும். இப்பிரச்சினை கோர்ட்டுக்கு சென்று வழக்குகள் நடைபெற்றிருக்கிறது. அதை எல்லாம் பார்த்து ஒரு முடிவு காண வேண்டும்.

கேள்வி:- தேனியில் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுத்திருக்கிறதே?

பதில்:- இதை புதிதாக நாங்கள் கொண்டுவரவில்லை. ஏற்கனவே நீண்டகாலமாக திட்டம் தீட்டப்பட்டு, நடைமுறைப்படுத்துகிற காரணத்தினாலே, வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியிலே எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்காக இடையூறு செய்ய வேண்டும் என்று தேடித்தேடி கண்டுபிடித்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த திட்டத்தை கொண்டு வந்த மாதிரியும், நாங்கள் மக்களுக்கு விரோதமாக செயல்படுவது மாதிரியும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, எங்களை பொறுத்தவரை மக்களுக்கு பாதிப்பில்லாத அரசாக ஜெயலலிதா அரசு செயல்படும்.

(தினத்தந்தி)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்திவந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.