இந்தியா
Typography

சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று சசிகலா வீட்டில் பணிபுரிந்து இல்ல பணிப்பெண்கள் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்களை அளித்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனித தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தம்மீது தமிழ்நாடு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், சட்ட நடவடிக்கை எடுக்க சற்று கால தாமதம் ஆகும் என்றும், அதுவரை தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும், பாதுகாப்பு மற்றும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் அவர். மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிகலா புஷ்பா எம்பி மீது 22ம் திகதி வரை தமிழநாடு காவல்துறை மற்றும் டெல்லி காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தனர். அதோடு, முன்னதாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் பெற வேண்டும் என்றும்  தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS