இந்தியா
Typography

மத்தியை ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டவர அ.தி.மு.க தயார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தால் ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் தொடர்ந்து முடக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல காவிரிப் போராட்டம் மாற வேண்டும் என்றும் தம்பிதுரை கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா உறுதுணையாக இருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் போராடுவோம் என தம்பிதுரை மேலும் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்