இந்தியா
Typography

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கோரிய மத்திய அரசின் மனுவை திரும்பப்பெற வேண்டும். மே மாதம் 3ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரை, பிரதமர் கண்டிக்க வேண்டும்.” என்றும் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்