இந்தியா
Typography

நாட்டில் நீடித்துவரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, புதிய ரூ. 500, 2000 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட துவக்கத்தில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலை, நாளடைவில் படிப்படியாக சீரானது.

இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்டது மக்களுக்கு கடும் அசவுகரியத்தை ஏற்படுத்தியது. டெல்லி, பீகார், தெலுங்கானா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு நிலவியது. இதனால், கோடை விடுமுறைக்கான செலவு மற்றும் கல்விக்கட்டணம் போன்றவற்றிற்கு பணம் எடுக்க நினைத்தவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த நிலையில், வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது: - “நாட்டில் உள்ள பணப்புழக்கம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தேவைக்கு அதிகமாகவே நாட்டில் பணம் புழக்கத்தில் உள்ளது. வங்கிகளிலும் போதுமான அளவு உள்ளது.

இந்த தற்காலிக பிரச்சினை வழக்கத்துக்கு மாறாக பண தேவை அதிகரித்து உள்ளதால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மாநிலம் வாரியாக குழுக்கள் அமைத்து பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை மத்திய நிதி அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்