இந்தியா
Typography

“மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்கள்.” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

தவறானச் செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு விரைவில் பேராசிரியையிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, போலீஸ் விசாரணை நடத்திவரும் நிலையில் ஆளுநரின் விசாரணை எதற்காக என ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்ப, அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராஜ்பவன் தரப்பில் விளக்கம் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களைச் சந்தித்தார். நிர்மலா தேவி விவகாரம், காவிரி விவகாரம் என அடுத்தடுத்து தமிழகத்தில் பிரச்னைகள் சூடுபிடித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரையும் ஆளுநருடன் இருந்தார்.

அப்போது பேசிய அவர், ``மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். மாணவிகளிடம் பேராசிரியை அவ்வாறு பேசியது கண்டனத்துக்குரியது. சட்டவிதிகளின்படியே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மாநில அரசு, பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது. ஒரு வாரத்தில் அவர் அறிக்கை அளிப்பார். அறிக்கை அளித்தபின்னர், அதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். என்னை கேட்காமல் 5 பேர் குழுவை மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்தது. நிர்மலா தேவி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நன் பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு இப்போது எந்த தேவையும் இல்லை" என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்