இந்தியா
Typography

“பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேச வேண்டும். நான் பிரதமராக இருந்த போது அவர் எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது, தற்போது அவர் பின்பற்ற வேண்டும்” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, “நான் பிரதமராக இருந்த போது, மவுனமாக இருப்பதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். கடந்த 2012ஆம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது 'மவுன மோகன் சிங்' என பா.ஜ.,வினர் கிண்டலடித்தனர்; இந்தப் பெயரோடு தான் நான் ஆட்சி முழுதும் வாழ்ந்தேன். ஆனால், தற்போது பிரதமராக இருக்கும் மோடி, என்ன செய்கிறார். முக்கிய பிரச்னைகளுக்கு வாய் திறக்காமல், அவர் மவுனம் காப்பது ஏன்?

கத்துவா மற்றும் உனா பாலியல் வன்கொடுமையால் இந்திய மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இச்சம்பவங்களுக்காக பிரதமர் மோடி தன் மவுனத்தைக் முன்கூட்டியே கலைத்து கருத்துகூறி இருக்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வாய்திறந்து பேசுங்கள் மோடி; எனக்கு நீங்கள் கூறிய அதே அறிவுரைகளைத்தான் உங்களுக்கு நானும் கூறுகிறேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்