இந்தியா
Typography

‘லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே’ என்று கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

அவர் பேசியுள்ளதாவது, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலைமை இரட்டிப்பாகும். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக பா.ஜ.க இருக்கும். மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் நிதி எதுவும் ஒதுக்கவில்லை.” என்றுள்ளார்.

வரும் மே மாதம் 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 15ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS