இந்தியா
Typography

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பா.ஜ.க.விலிருந்து விலகுவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார். 

வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என கூறினார்.

இதனால் பல்வேறு பாரதீய ஜனதா தலைவர்கள் அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டனர்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் பாஜகவிலிருந்து விலக போவதாக அறிவித்து உள்ளார். வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.

பாட்னாவில் உள்ள ராஷ்டிர மஞ்ச் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யஷ்வந்த் சின்ஹா இன்று நான் எல்லாவிதமான கட்சி அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன். இன்று நான் பாஜகவுடன் அனைத்து உறவுகளையும் முடித்துக்கொள்கிறேன் என கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS