இந்தியா
Typography

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை வரும் 50 ஆண்டுகளுக்கு ஆள்வதுதான் பா.ஜ.க.வின் இலக்கு என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்,

“சுதந்திரத்திற்குப் பின் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்ததைப் போன்று, பா.ஜ.க.வும் 50 ஆண்டுகள் ஆளவேண்டும் என்று விருப்பம் உள்ளது. உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச்செய்ய விரும்புகின்றோம். இதனை நிறைவேற்ற வேண்டுமானால் ஐந்து, பத்து வருடங்கள் போதாது. பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை வரும் 50 ஆண்டுகள் வெல்ல வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்