இந்தியா

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து இருப்பது பல்வேறு தரப்பினரிடமும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் மற்றும் குஜராத்தில் முறையே 8 மற்றும் 9 வயது சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டதும், உத்தரபிரதேசத்தின் உன்னாவில் 17 வயது சிறுமி ஒருவர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரால் வன்புணர்வு செய்யப்பட்டதும் நாட்டை உலுக்கியது.

டெல்லி நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை போல நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த மகளிர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சிறுமிகளை பாலியல் வன்புணர்வு புரிவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என அரசை வலியுறுத்தினர்.

இதைப்போல பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய மந்திரி மேனகா காந்தி உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்திய குற்றப் பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் ‘போக்சோ’ சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அவசர சட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.