இந்தியா
Typography

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த பிரேரணை, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது .

தீபக் மிஸ்ரா, நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார், சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து, காங்கிரஸ் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி உள்ளது.

இதில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸின் இம்முயற்சிக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தராது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தலைமை நீதிபதியை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த பிரேரணையை நிராகரித்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு. சட்ட வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று பதவி நீக்க தீர்மானத்திற்கான பிரேரணையை நிராகரித்து உள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்