இந்தியா
Typography

பாராளுமன்றம் போன்ற உயர் சபைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் இடம்பெறுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தங்கள் கீழ் பணியாற்றும் பெண்களிடம், பாலியல் ரீதியில் அனுகூலம் பெறுதல், சினிமா துறையில் மட்டுமே இருப்பதாக கூறமுடியாது. பாராளுமன்றம் உள்ளிட்ட பிற இடங்களிலும், இது பரவலாக அரங்கேறி வருகிறது. இது, மறுக்க முடியாத, கசப்பான உண்மை. இந்த கொடுமைக்கு எதிராக, இந்தியா துணிந்து நிற்க வேண்டும், 'நானும் இதனால் பாதிக்கப்பட்டேன்' என, பெண்கள் துணிச்சலுடன் தெரிவிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS