இந்தியா
Typography

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசு கொறடாவை மீறி வாக்கு அளித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. கொறடா சக்ரபாணி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

பின்னர் இது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யச பாநாயகருக்கு உத்தரவு இட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது

இது குறித்த விசாரணை 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. விசாரணை முடிந்தவுடன், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இது குறித்து முக்கிய தீர்ப்பு இன்று மதியம் 2.15 மணிக்கு உயர்நீதிமன்றம் வெளிட்டது.

தீர்ப்பில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறி உள்ளனர். இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவிட முடியாது என கூறினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்