இந்தியா
Typography

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சினையை காங்கிரஸ் கட்சி தீர்த்து வைக்கும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ப.சிதம்பரம், பெங்களூருவில் நேற்று செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “காவிரி பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா யோசனை கூறினார். ஆனால் அதை ஏற்க பிரதமர் மோடி ஏற்க மறுத்து விட்டார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்கும்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பி, சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் தாக்கினார். இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை, கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பில் அவை பாதிப்பை ஏற்படுத்தாது. சோனியா காந்தி குடும்பத்தினர் மீது பொதுவெளியில் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக நாடாளுமன்றத்தில் அதைச் செய்யட்டும். நாங்கள் பதில் சொல்வோம்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்