இந்தியா

‘நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர். சும்மா இருக்கும் அவரை உசுப்பேத்தி விடாதீர்கள்’ என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் வெற்றிடம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த தேர்தல் வந்தாலும், அதிமுகதான் வெற்றி பெறும். ஆடிட்டர் குருமூர்த்தி, அரசியல் குருமூர்த்தி ஆகக் கூடாது. காமாலைக்காரர்களுக்கு காண்பது எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.

குருமூர்த்தி முதலில் பட்ஜெட்டைப் படிக்க வேண்டும். பட்ஜெட்டைப் படித்து விட்டு பின்னர் பேச வேண்டும். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தது போல், ரஜினியை குருமூர்த்தி கெடுக்கக் கூடாது. ரஜினி நல்ல மனிதர், அவரை குருமூர்த்தி கெடுக்க வேண்டாம். சும்மா இருக்கும் ரஜினியை உசுப்பேத்தி விடாதீர்கள்.” என்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றி சாத்தியம் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.