இந்தியா
Typography

‘பா.ஜ.க. ஹிந்தி பேசும் மக்களுக்கான கட்சியல்ல. இந்தியா முழுமைக்குமான கட்சி’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. முக்கியஸ்தர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கர்நாடகா தேர்தல் வெற்றி எனக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்தது, அதே நேரம் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தது எனக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க. ஹிந்தி பேசும் கட்சி என குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் கோவா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களா? பா.ஜ.க. இந்தியாவிற்கான கட்சி. அதை கர்நாடக மக்கள் நிருபித்துள்ளனர். கர்நாடக மக்கள் என் மீது காட்டிய அன்பை மதிக்கிறேன். கர்நாடகா இனி முன்னேற்றத்தை நோக்கி நகரும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்