இந்தியா
Typography

புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டன. வட மாநிலங்களில் சமீபத்தில் ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதியடைந்தனர். ரூ.2000 நோட்டுகளின் புழக்கமும் பெருமளவில் குறைந்தன.

கறுப்புபணம் ஒழிப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, ரூ.2000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெறும் என்றும், இதனால் இந்த ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இதை மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து நிதித்துறை இணையமைச்சர் சிவபிரதாப் சுக்லா கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு இல்லை. தற்போது நிலைமை சீராகியுள்ளது. ரூ.500 நோட்டுகள் போதியளவு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படாது” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்