இந்தியா
Typography

கர்நாடக முதல்வர் எடியூரப்பா சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) தனது பதவியை இராஜினாமாச் செய்தார். 

கர்நாடக முதல்வராக கடந்த வியாழக்கிழமை பதவியேற்ற எடியூரப்பா, இரண்டு நாட்களே பதவி வகித்த நிலையில், தன்னுடைய பதவியிலிருந்து விலகியிருக்கின்றார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், பா.ஜ.க.வின் எடியூரப்பாவை, ஆளுநர் பதவியேற்குமாறு அழைத்தார். இந்த நிலையில், அவர் நேற்றுமுன்தினம் காலை பதவியேற்றார்.

எனினும், அதற்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை 04.00 மணிக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், நீண்ட உரையொன்றை ஆற்றிவிட்டு, எடியூரப்பா தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்