இந்தியா
Typography

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22ஆம் தேதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதன்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் ஸ்லோனின் ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் ஆறுதல் தெரிவித்து மட்டுமல்லாமல் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்