இந்தியா
Typography

“நரேந்திர மோடி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் உருவாகும் மெகா கூட்டணி, பா.ஜ.க.வை வீழ்த்தும்”என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாவது நாளான நேற்று புதன்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உருவாகும் “மகாத்பந்தன்” எனப்படும் மெகா கூட்டணி, மக்களின் உணர்வாகும். அது சாதாரண அரசியல் கட்சி கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 2019ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும். பிரதமரும், பா.ஜ.க.வும் அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாட்டின் இதர ஜனநாயக அமைப்புகளை தாக்கி வருகின்றனர். இதை எவ்வாறு நிறுத்துவது என்ற கேள்வியை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மக்களின் இந்த குரல்களை காங்கிரஸ் கட்சி ஒன்றிணைத்து வருகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.க்குள் கொண்டு வந்து சாதாரண மனிதர்களுக்கு கஷ்டத்தில் இருந்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை வலியுறுத்துகின்றன. ஆனால், பிரதமர் இதில் ஆர்வம் காட்டவில்லை. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு மூலமாக மும்பை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிய தொழில்கள், வர்த்தகர்கள், தோல் தொழில்கள் உள்ளிட்டவை மீது “கபர்சிங்” வரி மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 அமெரிக்க டாலராக இருந்தது. இது தற்போது 70 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் பயன்கள் பொதுமக்களை சென்று சேரவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்