இந்தியா
Typography

அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்வதாக அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் ஊடகவியலாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, “சட்டமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும் போது, 'ஸ்லீப்பர் செல்' யார் என்பது தெரியும். தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே வழக்கை வாபஸ் பெறுகிறார். பிற, சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்படி போராடுவர். ஓ.பி.எஸ்., மற்றும், ஈ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பை, எங்கள் கட்சிக்கு மக்கள் தந்து உள்ளனர். துரோகிகளிடம் இருந்து, இரட்டை இலையை மீட்க, ஆர்.கே.நகர் தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டி-யிட்டு வெற்றி பெற்றோம். இனி வரும் காலங்களில், எந்த தேர்தல் வந்தாலும், அ.ம.மு.க., சார்பில், தேர்தலை சந்தித்து, அ.தி.மு.க.,வை மீட்டு, கைப்பற்றுவோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS